நல்வரவு

வணக்கம் நண்பர்களே,

அனைத்து உறுப்பினர்களுக்கும் மன்றத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புது வருடம், புதிய வாய்ப்புகள் (Nytt aar, nye muligheter) என்று நம்பிக்கை தரும் நான்கு சொற்களுடன் பிறக்கின்ற புதிய ஆண்டினை நோர்வீஜியர்கள் எதிர்கொள்வார்கள்.

எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்ட மனிதர்களால்தான் வரலாற்று நதி தரித்து நிற்காமல் நகர்ந்தபடி இருக்கின்றது. துன்பம் வலிதரும். கூடவே துணிவினையும் தரும். சிரமங்கள்தான் மனிதனை சிந்திக்கத் தூண்டுபவை. ‘ஒரு கதவு மூடினால் பல கதவுகள் திறக்கும்’ என்று சொல்லப்படுபது வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மை. தோல்விகளினால் துவண்டுவிடாமால்-அந்தப் ‘பல கதவுகளை’த் திறக்கும் சாமர்த்தியம் நமக்கு வேண்டும். அழுகின்ற மனிதர்களை வெற்றி வெறுக்கும். நாளையப் பொழுது நமக்கென நம்புவோம். நம்பிக்கையோடு ஆண்டினைத் தொடங்குவோம்!

மன்றத்தின் 2011ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் இவ்வாரம் முதல் பொறுப்புக்களை ஏற்றுத் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. நிகழவிருக்கும் 15/01-11 பொதுக்கூட்டத்தில் ஆண்டு நிகழவுகள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் உத்தியோக பூர்வமாக மன்ற உறுப்பினர்களுக்கு இணையத்தளம், ஈமெயில் மூலமாக அறியத்தரப்படும்.

இவ்வாண்டும் மன்றத்தின் பணிகளில் உற்சாகத்துடன் பங்கெடுக்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

சந்திப்போம்!

அன்புடன்
யோகேஸ்வரன் சிவப்பிரகாசம்
தலைவர்
துரண்ணியம் தமிழ் மன்றம்
jan, 2011

Comments are closed.